நயன்தாரா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாதிரியார் - வைரல் வீடியோ!
கிறித்துவ பாதிரியார் ஒருவர் நயன்தாராவின் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மெகா வைரலாகி வருகிறது
நயன்தாரா நிவின் பாலி நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான படம் லவ் ஆக்ஷன் ட்ராமா. இந்த வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள "குடுக்கு பட்டிய குப்பாயம்" என்ற பாடல் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்து விட்டது. டிக் டாக் , டப்ஸ்மாஷ் என அனைத்திலும் கலக்கி வந்த இப்பாடல் தற்போது பாதிரியார் ஒருவரை தன்னிலை மறந்து ஆடவைத்துள்ளது.
பாதிரியார் மேத்யூ கிஷாக்கெச்சிரா என்பவர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது லவ் ஆக்ஷன் டிராமா படத்தில் "இடப்பெற்ற குடுக்கு பட்டிய குப்பாயம்" என்ற பாடல் ஒலிக்கப்பட்டதை கேட்ட உடனே பாதிரியார் தன்னை மறந்து நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை நிவின் பாலி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.