புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2019 (15:27 IST)

பிகில் ஆடியோ லான்ச்சிற்கு வராத நயன்தாரா அந்த படத்துக்கு மட்டும் போறாங்களா?

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நயன்தாரா அஜித், விஜய் , ரஜினி  போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். மேலும் மலையாளம் , தெலுங்கு, போன்ற பலவேறு மொழி படங்களிலும்  நடித்து தொடர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்து புகழின் உச்சத்தை எட்டியுள்ளார். 


 
தற்போது கோலிவுட்டில் அதிகம் சமபலம் வாங்கும் நடிகையாக முதல் இடத்தில் இருக்கிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து இயக்குனர்களுக்கு ராசியான நடிகையாக பேசப்படுதோடு தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தையும் ஈட்டி தருகிறார் நயன். இந்நிலையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்துவருகிறார். மேலும் தெலுங்கில் மறைக்கப்பட்ட மாவீரனின் கதையை மையமாக வைத்து பிரம்மாண்டமாக  உருவாகியுள்ள சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ளார். 


 
இந்நிலையில் சமீபத்தில் பிகில் படத்தில் ஆடியோ லாஞ்சிற்கு நயன்தாரா வருவார் என ரசிகர்கள் பெரிதும்  எதிர்பார்த்தனர். ஆனால், அவர் அதனை அசால்டாக நிராகரித்து விட்டார். காரணம்  வரும் ஞாயிறு கிழமை 22ம் தேதி ஹைதராபாத்தில் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் நயன்தாரா பங்கேற்க மறுத்து விட்டார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், நயன் சயீரா படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 
தென்னிந்திய சினிமாவில் பாகுபலி படத்திற்கு பிறகு பிரம்மாண்ட பொருட்செலவில், சிரஞ்சீவி,   அமிதாப்பச்சன், சுதீப், விஜய்சேதுபதி என பிரபலமான நடிகர்கள் பலர் நடித்துள்ள இப்படம் நிச்சயம் உலக அளவில் மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு,, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் நிச்சயம்  மக்களை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது. எனவே நிச்சயம் பிகுலுக்கு டாட்டா சொன்ன நயன்தாரா சயீரா இசைவெளியீட்டு விழாவில் சர்ப்ரைஸாக பங்கேற்பார் என பேசப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.