வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (17:47 IST)

சுல்தானுக்கு தடுப்பூசி...வைரல் புகைப்படம்

தமிழகத்தில் கொரொனா தொற்றுக் குறைந்து வந்தாலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எனவே பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி, சூரி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், இன்று, தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரும் சூரியாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி சற்று முன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதுகுறித்து புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து நான் எனது முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருவதை அடுத்து கார்த்தியின் ரசிகர்கள் நாங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாகக் கூறியுள்ளனர்.