1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (13:22 IST)

மெர்சல் படத்தை மிஞ்சிய வாரிசு - இருந்தும் என்ன லாபம்? புலம்பும் தயாரிப்பாளர்!

தளபதி விஜய் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளியான படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார். இப்படத்தில் ராஷ்மிகா, குஷ்பு,  பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட  நடிகர்கள் நடித்திருந்தார்கள். 
 
இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இதனால் வசூலில் பின்தங்கியது. இதுவரை இப்படம் ரூ. 141 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
 
இது மெர்சல் மெர்சல் படத்தின் சாதனையை  முறியடித்துள்ளது. இருந்தாலும் என்ன பயன்? இன்னும் ரூ. 25 கோடி வரை வசூல் செய்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்குமாம். இதனால் தயாரிப்பாளர் தில் ராஜு தலையை பிச்சிகொண்டு புலம்பியுள்ளாராம்.