வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (21:03 IST)

உன் வீட்டு பிரச்சனை ஊருபூரா நாறுது - அதை பணம் கொடுத்து வேற பார்க்கணுமா - வாரிசு ட்ரோல்!

தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை சிறப்புக் காட்சியோடு வெளியாகி பரவலாக ரசிகர்கள் கொண்டாடி விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் குடும்ப கதைகள், செண்டிமெண்ட் கொண்டு வெளியாகியுள்ளது. 
 
ஒரு சிலர் படம் பெரிசா ஒண்ணுமில்ல  சீரியல் போல உள்ளதாக கருத்துகளை தெரிவித்து ட்ரோல் செய்தனர். அதிலும் அவரச அவசரமாக எதையேனும் வெளியிடவேண்டும் என இருந்தது போல் உள்ளது என கூறினார். 
 
இந்நிலையில் தற்போது படம் பார்த்த ஆடியன்ஸ் ஒருவர், உன் வீட்டு பிரச்சனை தான் ஊருபூரா நாறுதே அதை நீ படம் வேற எடுத்து அதை நாங்க பணம் கொடுத்து வேற பார்க்கணுமா....? உங்க அப்பா அம்மாவுக்கு கருத்து சொல்றதுக்கு பல கோடி போட்டு முதலீடு செய்யுற படம் தான் கிடைச்சுதா? நேரா உங்கப்பாவை கூப்பிட்டு வச்சு சொல்லிட்டு போகவேண்டியதானே என கிண்டல் அடித்துள்ளார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர்  செய்துள்ளனர்.