புதன், 5 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2023 (21:48 IST)

அர்ஜுன் மகளை காதலிப்பதற்கு முன் கவர்ச்சி நடிகையுடன் உறவு - உமாபதியின் உண்மை முகம் அம்பலம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் நிவேதிதா என்பவரை கடந்த 1988ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஐஸ்வர்யா அர்ஜுன், அஞ்சனா சர்ஜா என இரண்டு மகள்கள் உள்ளனர். 
 
இதில் ஐஸ்வர்யா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.இந்நிலையில் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து வருகிறாராம். 
 
வருகிற தை மாதம் இருவீட்டாரின் சம்மதத்தின் படி திருமணம் நடைபெற உள்ளதாம். இந்நிலையில் உமாபதி ராமைய்யா ஐஸ்வர்யாவை காதலிப்பதற்கு முன்னர் சில ஆண்டுகள் நடிகை யாஷிகா ஆனந்தை காதலித்து டேட்டிங் செய்து வந்ததாக தகவல் கசிந்து வைரலாகி வருகிறது.