திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (08:53 IST)

ரஷ்யா தாக்குதலில் பிரபல உக்ரைன் நடிகை பலி!

ரஷ்யா தாக்குதலில் பிரபல உக்ரைன் நடிகை பலி!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யாவின் ஆவேசமான தாக்குதலில் நடிகை ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் நாட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு திடீரென ராக்கெட் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இந்த தாக்குதலில் ரஷ்ய நடிகை ஒக்சானா ஸ்வெட்ஸ் உயிரிழந்ததாகவும் அவரது உயிரிழப்பை அவரது குடும்பத்தினர் உறுதி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
உக்ரைன் நாட்டில் வழங்கப்படும் மிக உயரிய விருதை பெற்றவர் நடிகை ஒக்சானா என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பிரபல நடிகை ஒருவர் உயிரிழந்திருப்பது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது