1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (00:21 IST)

பிரபல நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பது ஏன்?

பர்கர் கிங், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பது ஏன்?
 
பிரபல நிறுவனங்களாக மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர், பர்கர் கிங், மற்றும் மேரியட் ஹோட்டல் குழுமம், அக்கார் ஆகியவை சிக்கலான ஒப்பந்தங்களால் தங்களின் கிளைகளை மூட முடியாமல் இருக்கின்றன.
 
இந்த நிறுவனங்கள் ரஷ்ய வணிகங்களை மூன்றாம் தரப்பினருக்கு அவுட்சோர்ஸ் செய்துள்ளன; இதனால், அவர்களின் பெயரைக் கொண்ட நடக்கும் நிறுவன செயல்பாடுகளை, அவர்கள் உரிமை கோர முடியாது.
 
இந்த நிறுவனங்கள் அனைத்தும் ரஷ்யாவில் இன்னும் ஆயிரம் விற்பனை நிலையங்களை கொண்டுள்ளன.
 
அங்கு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர் நிறுவனத்திற்கு 48 கடைகள் உள்ளன; பர்கர் கிங்கின் 800 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேரியட்டின் 28 விடுதிகளும், அக்கார் நிறுவனத்தின் 57 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
 
இந்த நிறுவனங்கள் சட்டப்பூர்வ உரிமை ஒப்பந்தங்களில் சிக்கி இருப்பதை பிபிசி அறிந்துள்ளது. இதனால் ரஷ்யாவின் பிரபல இடங்களிலும், ஷாப்பிங் மால்களிலும் இருந்து அவர்களின் பெயரை அகற்றுவது அவர்களுக்கு கடினமாக உள்ளது.