1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (08:40 IST)

இந்தி திணிப்புக்குதான் எதிர்ப்பு… இந்தி படங்களுக்கு அல்ல! – உதயநிதி ஸ்டாலின்!

Laal singh chaddha
அமீர்கானின் “லால் சிங் சத்தா” படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்தி நடிகர் அமீர்கான் நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் “லால் சிங் சத்தா”. ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்து புகழ்பெற்ற படமான “ஃபாரஸ்ட் கம்ப்” படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த “லால் சிங் சத்தா”. இந்த படத்தை இந்தியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடுகிறார்கள்.

இந்த படத்தின் தமிழ் மொழி ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இந்த படத்திற்கான தமிழ் ப்ரொமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், அமீர்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் “தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு மட்டும்தான் எதிர்ப்பு. இந்தி படங்களுக்கு அல்ல. நான் அமீர்கானின் மிகப்பெரிய ரசிகன். இந்த படத்தை வெளியிடுவது எனக்கு ஒரு பேன் பாய் மொமெண்ட்” என்று கூறியுள்ளார்.