1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (14:55 IST)

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த ரிலீஸ் ‘கண்ணை நம்பாதே’ – இயக்குனர் பகிர்ந்த தகவல்!

சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளரும், நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இப்போது சினிமாவில் நடிப்பதை முழுமையாக தவிர்த்துள்ளார். அவர் ஏற்கனவே நடித்த கண்ணை நம்பாதே மற்றும் மாமன்னன் ஆகிய படங்கள் மட்டும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

இந்நிலையில் அவர் நடித்து நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த அவரின் கண்ணை நம்பாதே படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷம் கிரைம் திரில்லர் வகைமையில் உருவாகும் இந்த படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் இயக்குனர் மு மாறன் இயக்கியுள்ளார்.

இந்த படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக இயக்குனர் மு மாறன் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் உதயநிதி நடிப்பில் கடைசி படமாக மாமன்னன் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.