1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (12:09 IST)

மாமன்னன் படத்தின் செம்ம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

மாமன்னன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இன்று இந்த படத்தின்  சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் வடிவேலு உள்ளிட்ட முக்கியக் கலைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழ்வினர் அறிவித்துள்ளனர். மேலும் படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.