இரண்டு நாளில் ரூ. 100 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்த சர்கார்

Last Modified வியாழன், 8 நவம்பர் 2018 (13:45 IST)
சர்கார் சாதனை பற்றி தான் தமிழகம் முழுவதும் தற்போது பேச்சு, அந்த வகையில் இந்த படம் திரைக்கு வந்த இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து அபார சாதனையை படைத்துள்ளது.
 
தளபதி விஜய் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படம்,  ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. விஜய் படம் ஒன்று இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்திருப்பது இந்த பட குழுவினரை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.  இதில் இந்தியாவில் மட்டுமே ரூ. 75 கோடி வரை வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ரூ. 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 
 
இதன் மூலம் விஜய் தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்திற்கு செல்கிறார் என்பதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :