திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (13:41 IST)

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளிவர இருக்கும் பான் இந்தியத் திரைப்படமான 'தி கோட் லைஃப்- !

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ வருகிற 28 ஆம் தேதி மார்ச், 2024 அன்று  திரையரங்குகளில் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது

இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதற்கு சான்றாக, புக் மை ஷோ தளத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
 
 ‘கல்கி’, ‘தேவரா’ மற்றும் ‘இந்தியன்2’ போன்ற பான் இந்திய படங்கள் வெளிவர இருந்தாலும் அவற்றைத் தாண்டி, ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
 
 ‘புஷ்பா2’ படத்திற்காக 170,000+ பார்வையாளர்கள் ஆர்வம் காட்டியிருக்கும் அதே சமயத்தில், 129,000+ பார்வையாளர்கள் ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஆர்வம் காட்டியுள்ளனர்.
 
மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.
 
புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
 
தொண்ணூறுகளின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த  இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைதான் இந்த நாவல் விளக்குகிறது. 
 
தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸி இயக்கத்தில் விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர்.
 
படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். 
 
இதன் தயாரிப்பு தரம், கதைசொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது.
 
இந்திய சினிமாவின் மிகப் பெரிய பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்’ திரையரங்குகளில் 28 மார்ச், 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.