1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (15:44 IST)

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டிடிஎப் வாசனின் காதலி போட்டியாளரா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பைக் விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசனின் காதலி இந்த நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது 
 
நடிகை ஷாலினி சோயா தான் டிடிஎப் வாசனின் காதலி என்று கூறப்படும் நிலையில் இவர் தமிழில் ராஜா மந்திரி, கண்ணகி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கு சென்று வந்துள்ளதாகவும் இந்த சீசனின் போட்டியாளராக களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் சில திரை உலக பிரபலங்கள் தொலைக்காட்சி பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் ரக்சன் தொகுத்து வழங்க புகழ், சுனிதா, ராமர், குரேஷி உள்ளிட்ட சிலர் கோமாளிகளாக இருக்க போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் விலகி விட்ட நிலையில் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக செயல்பட போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran