செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 ஜனவரி 2018 (23:12 IST)

'தானா சேர்ந்த கூட்டம்' பாடல்கள் இன்று ரிலீஸ்: சர்ப்ரைஸ் அறிவிப்பு

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வெளியாகவுள்ளது.

இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூஏ' சான்றிதழை பெற்றுவிட்ட நிலையில் தற்போது இன்று இந்த படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் நான்கு பாடல்கள் சிங்கிள் பாடலாக வெளியான நிலையில் ஐந்தாவது பாடலுடன் முழு ஆல்பமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க்கது

1. நானா தானா வீணா போனா சரியே இல்லடா

2. சொடக்கு மேல சொடக்கு போடுது

3. வெட்டி வீரத்தால வீணா சேர்ந்த கூட்டம்

4. பீலா பீலா பீலா பீலா உடாதே

மேற்கண்ட நான்கு பாடல்களுடன் ஐந்தாவது பாடலான அனிருத்தின் ஃபேவரேட் பாடலும் சேர்ந்து நாளை ஐந்து பாடல்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.