வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2021 (19:20 IST)

த்ரிஷ்யம் 2 சூப்பர் வெற்றி...சூப்பர் ஸ்டார் நெகிழ்ச்சிப் பதிவு !

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மோகன் லால், மீனா, நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் த்ரிஷ்யம். இப்படம் வசூல் சாதனை புடைத்தது. அதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இப்படத்தின் வெற்றியை அடுத்து, இப்படத்தில் 2 ஆம் பாகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் அரசு விதித்த சில தளர்வுகளுடன் வேகமாக வளர்ந்துவந்த இப்படத்தின் ஷூட்டிங் அனைத்து நடிகர்களின் பங்களிப்பில் இனியே முடிவுற்று இன்று நேற்று ஒடிடி தளத்தில் வெளியானது.

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

இதுகுறித்து சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

த்ரிஷ்யம் 2 படத்திற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் கிடைத்துள்ளதுடன் நல்ல விமர்சனங்கள் கிடைத்துவருகிறது. நல்ல படத்தை உலகிலுள்ள சினிமா ரசிகர்கள் பாராட்டுவார்கள் என்பதற்கு இப்படமே சான்று. இப்படத்திற்கு கிடைத்த பாராட்டால் எங்கள் படக்குழுவிற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.