ராம்-சிம்பு இணையும் படம் சரித்திரக்கதையா?

ராம்-சிம்பு இணையும் படம் சரித்திரக்கதையா?
siva| Last Updated: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (20:09 IST)
ராம்-சிம்பு இணையும் படம் சரித்திரக்கதையா?
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனை அடுத்து ’பத்து தல’ என்ற திரைப் படத்தில் சிம்பு நடிக்க உள்ளார் என்பதும் அதனை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப் படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிரபல இயக்குநர் ராம் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது இந்த நிலையில் ராம்-சிம்பு இணையும் படம் சரித்திர கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தில் வரும் நீண்ட பிளாஷ்பேக் சரித்திரக் கதையை ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறதுஇதில் மேலும் படிக்கவும் :