3 கெட்டப்பில் அதர்வா
அதர்வா நடித்துவரும் ‘பூமராங்’ படத்தில், அவர் மூன்று கெட்டப்பில் நடிக்கிறார்.
கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துவரும் படம் ‘பூமராங்’. இந்தப் படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடிக்க, சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, உபென் படேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு இசையமைத்த ரதன், இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தை இயக்குவதோடு, தன்னுடைய மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் கண்ணன்.
இந்தப் படத்தில், அதர்வா மூன்று கெட்டப்பில் நடிக்கிறார். இதற்காக, புகழ்பெற்ற மேக்கப் வல்லுநர்கள் ப்ரீத்திஷில் சிங், மார்க் ட்ராய் டிசோஸா இருவரும் மெனக்கெட்டு அதர்வாவின் தோற்றங்களை உருவாக்கி உள்ளனர். ‘பத்மாவத்’, ‘மாம்’, ‘102 நாட் அவுட்’ உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் பணியாற்றியவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.