திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (15:07 IST)

விஜய் - த்ரிஷா குறித்து சுசித்ராவின் சர்ச்சை கருத்து.. பதிலடி கொடுத்த த்ரிஷா..!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து பாடகி சுசித்ரா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நிலையில் அந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விஜய் பிறந்தநாளன்று நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் மாறியது என்பதும் இது குறித்து பாடகி சுசித்ரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இது குறித்து நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் மற்றவர்கள் சொல்வதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால் உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் திரிஷாவின் இந்த பதிவு சுசித்ராவுக்கான பதிலடியாக கருதப்படுகிறது
 
Edited by Mahendran