1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : சனி, 29 அக்டோபர் 2022 (10:37 IST)

பொன்னியின் செல்வன் வெற்றி எதிரொலி… தளபதி 67 படத்துக்கு சம்பளம் இவ்வளவா?

தளபதி 67 படத்தி  நாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் வாரிசு திரைப்படம் இன்னும் சில தினங்களில் முழுவதும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது. இதை முடித்துவிட்டு அவர் உடனடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை தொடங்க உள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்காக 100 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ள திரிஷா, இந்த படத்துக்காக தன் வாழ்நாளில் இதுவரை வாங்காத அளவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க உள்ளாராம். இதற்குக் காரணம் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படம்தான் என்று சொல்லப்படுகிறது.