வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (20:52 IST)

96 - திரைவிமர்சனம்

விஜய் சேதுபதி - திரிஷா நாயகன் நாயகியாக, அவர்களுடன் ஜனகராஜ், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்க, பிரேம்குமார் இயக்கத்தில் காமம் இல்லாத காதல் படமாக வெளியாகியுள்ளது 96.
 
கதைப்படி, சென்னையில் பிரபல புகைப்பட கலைஞராகவும், பகுதி நேர புகைப்படக் கலை டியூட்டராகவும் இருக்கும் விஜய் சேதுபதி தன் போட்டோகிராபி ஜுனியர்களுடன் தஞ்சை பகுதிக்கு செல்கிறார். 
 
அப்போது, அங்குதான் பத்தாம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கூடத்திற்கு போகிறார். அப்போது, சக மாணவியும், தன் வகுப்பிலேயே நல்ல பாடக்கூடிய திரிஷாவுடனான தன் காதலும் அவருக்கு ஞாபகம் வர, உடனே 96 பேட்ச் மீட் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. 
 
உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் பேட்ச் மீட் பார்ட்டிக்கு திரிஷா வந்ததும், 22 வருடங்கள் கழித்து சந்திக்கும் இவர்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது? விஜய் சேதுபதி திருமணம் செய்து  கொள்ளாத்து ஏன்? இருவரின் காதல் கைகூடாமல் போக காரணம் என்ன? உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு காதல் ரசத்தோடு விடையளிக்கிறது 96 படத்தின் மீதிக் கதை.
 
ராமு எனும் ராமசந்திரனாக விஜய் சேதுபதி, வழக்கம் போலவே மிரட்டலாக நடித்திருக்கிறார். குழந்தை தனமாக இருக்கும் விஜய் சேதுபதிக்குள் உறங்கிக் கிடக்கும் பத்தாங் கிளாஸ் காதல், ஜானு   வந்ததும் அவர் கொடுக்கும் உணர்வுகள் சூப்பர். 
 
ஜானுவின் பாட்டுக்காகத்தான், நான் ஸ்கூல் டேஸில் 90% அட்டென்டன்ஸ் எடுத்ததற்கு காரணம்... என உண்மையைபோட்டு உடைக்கும் இடங்களிலும்,  முன்னால் காதலியை தன் ப்ளாட்டுக்குள் கூப்பிடும் இடங்களிலும்... மனிதர், ஒவ்வொரு ரசிகனையும் பிரதிபலிப்பது அட்டகாசம்.
 
ஜானு எனும் ஜானகியாக த்ரிஷா, சிறப்பாக நடித்திருக்கிறார். சிங்கப்பூர் ரிட்டர்னாக ஒரு குழந்தைக்கு தாயாக சிங்கப்பூர் வாழ்க்கையை ஒற்றை வரி பதிலில் சொல்லும் விதத்தில் துவங்கி,  விஜய் சேதுபதி வீட்டில் நடக்கும் சுவாரஸ்யங்கள் என நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். 
 
விஜய் சேதுபதி, த்ரிஷாவின் வகுப்புத்தோழி தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், சின்ன வயது ராம், ஜானு ஆகிய அனைவரும் கச்சிதம். 
 
வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில் 96 பேட்ச் மீட் நடைபெறும் லொகேஷன் உள்ளிட்டவை அசத்தல். கோவிந்த் வஸந்தா இசையில், பாடல்களும், கதையோடு ஒட்டி உறவாடும் பின்னணி இசையும் சுப ராகம். 
 
பிரேம்குமார் இயக்கத்தில், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கும் அவரவரது ப்ளாஷ்பேக் பள்ளிப் பருவ காதலை தட்டி எழுப்பி, மலரும் நினைவுகளில் மூழ்க வைத்திருப்பதில் 96 வெற்றி பெற்றிருக்கிறது.
 
மொத்தத்தில் '96', 99% காதல் படம், என்பதால் 100% வெற்றி நிச்சயம்.