ரஜினி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட த்ரிஷா ரெடியாம்…
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘காலா’ படத்தில், ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு கூட தயாராக இருக்கிறாராம் த்ரிஷா.
த்ரிஷா சினிமாவில் நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை வருடங்களாக ஹீரோயினாகவே நடிக்க முடியும் என தமிழ் சினிமாவில் சாதித்துக் காட்டியவர் த்ரிஷா. அவருக்குப் பின் நயன்தாரா, தமன்னா என பலரும் வரிசையில் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், முதல் விதை த்ரிஷா போட்டதுதான்.
15 வருடங்களில் பல ஹீரோக்களுடன் நடித்துவிட்ட த்ரிஷாவுக்கு, ரஜினியுடன் மட்டும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்ற தீராத ஏக்கம் உண்டு. ‘காலா’விலாவது அந்த ஏக்கம் பூர்த்தியாகும் என்று பார்த்தார். ஆனால், பாலிவுட் நடிகைதான் வேண்டும் என படக்குழு ஒற்றைக்காலில் நின்றதால், அந்த வாய்ப்பும் பறிபோனது. இந்நிலையில், ‘ரஜினி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டால் சம்மதிப்பீர்களா?’ என்ற கேள்விக்கு, “முதலில் வரட்டும், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்று பதில் அளித்துள்ளார் த்ரிஷா. அப்படியானால், தயாராகத்தான் இருக்கிறார் த்ரிஷா.