வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (09:47 IST)

அமிதாப் ரீமேக் படத்தில் த்ரிஷா?

அமிதாப் நடித்த 'பிங்க்' ரீமேக் படத்தில் தல அஜித், ஷராதா ஸ்ரீநாத், வித்யாபாலன் ஆகியோர் நடித்து வரும் நிலையில் அமிதாப் நடித்த மற்றொரு வெற்றிப்படமான 'பாட்லா'  என்ற இந்தி திரைப்படமும் தற்போது தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்த படத்தில் அமிதாப் மற்றும் டாப்சி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில் டாப்சியின் வேடத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
அதேபோல் அமிதாப் வேடத்தில் நடிக்கவும் ஒரு முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் முதல்முறையாக அந்த முன்னணி நடிகரும் த்ரிஷாவும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியில் சுஜாய் கோஷ் இயக்கிய இந்த படத்தை தமிழில் முன்னணி இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை சமீபத்தில் ரஜினி, கமல், விஜய் படங்களை தயாரித்த ஒரு முன்னணி நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் செய்திகள் கசிந்து வருகிறது.