1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 மே 2019 (08:33 IST)

திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு! கைது செய்யப்படுவாரா?

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு வழக்கு அவர் மீது சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
 
சென்னையில் மே 18ஆம் தேதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின கூட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவர் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தூள்ளனர். 
 
இதனையடுத்து இந்த வழக்கின் காரணமாக திருமுருகன் காந்தி கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.