வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (08:00 IST)

மட்ட பாடலில் விஜய்யோடு குத்தாட்டம் போட்ட த்ரிஷா… புகைப்படத்தை லீக் செய்த ரசிகர்கள்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கோட் படத்தின் 9 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டதால், முதல் காட்சி முடிந்து ரசிகர்களின் விமர்சனங்கள் வெளிவர தொடங்கியுள்ளன. விஜய் ரசிகர்கள் ஆஹோ ஓஹோவென்று புகழ்வதும் பொதுவான ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை சொல்வதும்தான் தற்போதைய நிலவரமாக உள்ளது.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷாவின் கேமியோ பற்றி இப்போது ரசிகர்கள் ஸ்பாய்லர் செய்ய ஆரம்பித்துள்ளனர். படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலுக்கு விஜய்யோடு இணைந்து த்ரிஷா குத்தாட்டம் போட்டுள்ளாராம். இது சம்மந்தமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் பகிர அது வைரலாகி வருகிறது.