கொடைக்கானல் கொண்டை வளைவில் ஜீப் ஓட்டிய த்ரிஷா
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இணையாக கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் சினிமா ஃபீல்டில் இருக்கும் த்ரிஷா, அவரை போலவே ஆக்சன் படத்திலும் இறங்கி அடிக்க முடிவு செய்துவிட்டார். அதற்கு உதாரணம் தான் 'கர்ஜனை' படம்
இந்த படத்தில் கொடைக்கானல் கொண்டை வளைவில் தன்னந்தனியாக வேகமாக ஜீப் ஓட்டும் காட்சியில் த்ரிஷா டூப் இல்லாமல் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி காரைக்குடி மணல் தரையில் புழுதி பறக்க குதிரையில் சவாரி செய்துள்ளார். மேலும் ஆக்சன் காட்சிகளுக்காக ஸ்டண்ட் இயக்குனரிடம் பயிற்சி பெற்றுள்ளாராம். இதெல்லாம் இந்த படத்தின் மூலம் தானும் ஒரு ஆக்சன் ஹீரோயினி என்பதை நிரூபிக்கத்தானாம்
அறிமுக இயக்குனர் சுந்தர்பாலு இயக்கி வரும் இந்த படத்தின் படப்ப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். மிக விரைவில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.