வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (18:14 IST)

பொன்னியின் செல்வன் வந்தியதேவனுக்கு ஜோடி யார்? பரபரப்பு தகவல்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் முடிந்தது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியதேவன் என்ற இந்த நாவலின் ஹீரோ கேரக்டரில் கார்த்தி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த கேரக்டரில் நடிக்கும் கார்த்திக்கு ஜோடியாக அதாவது குந்தவை கேரக்டரில் யார் நடிக்க உள்ளார் என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக எழுந்து வந்தது
 
இந்த நிலையில் தற்போது த்ரிஷா தான் இந்த கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் முதல் முறையாக அவர் கார்த்திக் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த தகவல் விரைவில் உறுதி செய்யப்படும் என தெரிகிறது 
 
மேலும் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் நாவலின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் பெரும்பாலான புகைப்படங்கள் குந்தவை புகைப்படங்களாக இருப்பதால் அவர் குந்தவை கேரக்டரில் நடிக்க உள்ளதை மறைமுகமாக அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது