திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (16:01 IST)

அஜித் கெட்டப்பில் சிம்பு – வைரலாகும் புதிய புகைப்படம்!

நடிகர் சிம்பு தனது புதிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை கூறி குண்டாக காணப்பட்டார். அதனால் சமூகவலைதளங்களில் அவரை கேலி செய்யவும் ஆரம்பித்தனர். இந்நிலையில் லாக்டவுனில் ஆயுர்வேத சிகிச்சைகள் எடுத்துக் கொண்ட அவர் உடல் எடை இளைத்து பழைய தோற்றத்தில் திரும்பி வந்தார். அதையடுத்து இப்போது ஈஸவரன் மற்றும் மாநாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது குர்தாவில் சால்ட் அண்ட் பெப்பர் சிகையலங்காரங்கத்தில் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.