வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2023 (20:39 IST)

2023 –ல் கூகுளில் டிரெண்டிங்கான டாப் இசைக்கலைஞர்கள்!

Shakira Colombian singer
உலகின் முழுவதும் இசை எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மொழிகளிலும் இசைக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  2023 ஆண்டின் இறுதி மாதம் நடந்து வரும்  நிலையில், கூகுளில் டாப் 10 இசைக்கலைஞர்கள் பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கொலம்பியன்  பாப் பாடகி ஷகிரா முதலிடத்திலும், ஜேசன் அல்டேன் 2 ஆம் இடத்திலும், ஜோ ஜோனாஸ் 3வது இடத்திலும், ஸ்மாஸ் மவுத் 4 வது இடத்திலும், பெப்பினோ டி காப்ரி 5 வது இடத்திலும், ஜினோ பாலி 6வது இடத்திலும், டாம் காலிட்ஸ் 7 வது இடத்திலும், கெலி பிக்ளர் 8வது இடத்திலும், ஜோஸ் லூயிச் பெரலஸ் 9வது இடத்திலும், அன்னா ஆக்ஸா 10 வது இடத்திலும் உள்ளனர்.