செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 25 மே 2017 (14:02 IST)

இன்று மாலை ரஜினியின் காலா படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு!

ரஜினியும், பா.இரஞ்சித்தும் இணைந்துள்ள படத்துக்கு ‘காலா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காலை தான் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ரசிகர்களும் படத்தின் பெயரை டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் காலா படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக தனுஷ் தன்னுடைய  டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு #makewayfortheking என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தை தனுஷின்  தயாரிப்பு நிறுவனம் வுண்டர் பார் தயாரிப்பதாக அறிவித்தது.

 
காலா படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படம் வரும் மே 28-ம் தேதி மும்பையில்  தொடங்குகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மும்பை செல்கிறார். இந்த நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று மாலையே வெளியாகும் என்று ரஞ்சித் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிபார்த்து காத்திருக்கின்றனர்.