வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (07:02 IST)

'பிகில் படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பிகில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்மாதத்துடன் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அடுத்த மாதத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, வரும் தீபாவளி ரிலீசுக்கு இந்த படம் தயாராகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக் ஆகிய அப்டேட்டுக்கள் விஜய்யின் பிறந்த நாள் விருந்தாக வெளிவந்த நிலையில் தற்போது இன்று மாலை 6 மணிக்கு சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவரவுள்ளது. இதுகுறித்த தகவலை அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் வழக்கமாக வரும் சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும், வித்தியாசமான, வேற லெவல் அப்டேட் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்படி புதுமையான அப்டேட் என்னவாக இருக்கும் என்பதை இன்று மாலை 6 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய், நயன்தாரா இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ்,  இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்