செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (15:35 IST)

‘காலா’ படத்துக்கு இத்தனை இடங்களில் வெட்டா?

‘காலா’ படத்துக்கு கிட்டத்தட்ட 14 இடங்களில் வெட்டு தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டேல், சாக்‌ஷி அகர்வால் எனப் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
 
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஏப்ரல் 27ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் முதலில் ‘ஏ’ சான்றிதழ் தருவதாகக் கூறியிருக்கின்றனர். ஆனால், படக்குழு கேட்டுக் கொண்டதற்காக 14 இடங்களில் வெட்டச் சொல்லியிருக்கின்றனர். அப்படி வெட்டியும் ‘யு/ஏ’ சான்றிதழ் தான் கிடைத்திருக்கிறது.