செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஜூலை 2019 (13:41 IST)

"கர்மா இஸ் பேக்" அபிராமியை கதறவிட்ட வனிதா - கெஞ்சி அழும் வீடியோ இதோ!

இன்றைய நாளுக்கான அடுத்த ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. மதுமிதாவை அடுத்து வனிதாவின் அடுத்த டார்கெட் அபிராமி. 


 
சற்றுமுன் வெளிவந்துள்ள இரண்டவது ப்ரோமோ வீடியோவில் சண்டைக்காரி சொர்ணாக்கா வனிதா,  அபிராமியை மிகவும் மோசமாக திட்டுகிறார். அதாவது கமல் பங்குபெற்ற நேற்றைய நிகழ்ச்சியில் மதுமிதாவுக்கு ஆதரவாக மாறினதற்காக வனிதா அபிராமிக்கு எதிராளியாக மாறியுள்ளார். 
 
அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோவில் அபிராமி மற்றும் வனிதாவுக்கு  இடையே சண்டை வெடித்துள்ளது. வனிதா அபிராமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை திட்டுகிறார்.  இதனை சகித்துக்கொள்ளமுடியாமல் ஆபிராமி  பாத்ரூமுக்கு சென்று கேமரா முன்பு கதறி அழுகிறார். 'என்னை விட்டுடுங்க ப்ளீஸ், நான் வெளியே போகிறேன்' என ஆபிராம் கதறி அழுகிறார். 
 
இந்த விடியோவை கண்ட நெட்டிசன்ஸ் இப்போ தெரிகிறதா. இதே தான் மதுமிதாவிற்கும் நடந்தது. வனிதா மோசமான ஆள்,  அதனால் அவரிடமிருந்து நீங்கள் ஒதுங்கி நல்லவராக இருங்கள் என அட்வைஸ் செய்துவருகிறார்கள்.