திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 24 மே 2021 (20:55 IST)

’தி ஃபேமிலிமேன் 2’ தொடரை தடை செய்யுங்கள்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்த ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற விரைவில் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த தொடரின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 
 
இந்த நிலையில் ’தி ஃபேமிலிமேன் 2’  தொடரை தடைசெய்ய வேண்டுமென சீமான் வைகோ உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது தமிழக அரசும் இது குறித்து கடிதம் ஒன்றை மத்திய அரசுக்கு எழுதியுள்ள்து.
 
’தி ஃபேமிலிமேன் 2’ வெப்தொடரை  தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு சற்று முன் கடிதம் எழுதி உள்ளதாக  தமிழக அமைச்சர் மனோஜ் மனோ தங்கராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை இந்த தொடர் பெருமளவு புண்படுத்தி உள்ளது என்று தமிழக அரசு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.