வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 மே 2021 (19:49 IST)

சமந்தாவின் வெப்தொடரை தடை செய்ய கோரி மத்திய அமைச்சருக்கு வைகோ கடிதம்!

நடிகை சமந்தா, பிரியாமணி உள்பட பலர் நடித்த ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடரை தடை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமந்தா நடிப்பில் ராஜ் மற்றும் டிகே இயக்கிய வெப்தொடர் ’தி ஃபேமிலிமேன் 2’. இந்த தொடர் அமேசான் பிரைமில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த தொடரின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு சில கட்சிகள் இந்த தொடரை ஒளிபரப்பக் கூடாது என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக சீமான் தொடர் குழுவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ’தி ஃபேமிலிமேன் 2’ தொடரை தடை செய்ய கோரி செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.