வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (12:51 IST)

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை: டாடா குழுமம் திட்டம்!

Iphone
இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஐபோன்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய தொழில் நிறுவனமான டாடா குழுமம் ஆப்பிள் ஐபோனை விரைவில் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஐபோன்களை அசெம்பிள் செய்யும் பணிகளை தொடங்க எலக்ட்ரானிக் ஆலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையை டாடா நிறுவனம் தொடங்கும் என்றும் குறிப்பாக இந்த நிறுவனம் சென்னையில் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.