1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 29 மே 2021 (23:53 IST)

மீன் பண்ணைகளில் டிலாபியா ரக மீன் வளர்ப்பு

பிரேசிலில் இருக்கும் பல மீன் பண்ணைகளில் டிலாபியா என்கிற இந்த ரக மீன் வளர்க்கப்படுகிறது. இது ஒருவகை நன்னீர் மீன்.
 
டிலாபியா மீன் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வேறொரு வகையிலும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தீக்காயங்களுக்கான சிகிச்சையில் இந்த மீனின் தோலை மருத்துவர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மீனிலிருந்து உரிக்கப்பட்ட தோல் வெட்டிசுத்தமாக்கி குளிரூட்டிகளில் பாதுகாக்கப்படுகிறது. தீக்காயங்களின் மீது கட்டுப்போட இந்த மீன் தோல்கள் பயன்படுகின்றன.
 
இந்த மீன் தோல் தீக்காயத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு தோல்வளர்ந்து காயம்ஆறவும்உதவுகிறது. தீக்காயங்களுக்கான மற்ற சிகிச்சைகளை விட இது மிகவும் மலிவானது. இந்த சிகிச்சை முறை இன்னமும் பரிசோதனையாகவே மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவர்கள் இந்த சிகிச்சையை மற்ற நாடுகளுக்கும் விரிவாக்க முடியும் என நம்புகிறார்கள்.