திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (17:51 IST)

இணையத்தில் வெளியான துப்பறிவாளன் - படக்குழு அதிர்ச்சி

நடிகர் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.


 

 
இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஏனெனில், விஷால் ஒரு துப்பறியும் நிபுணராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
புதிய தமிழ் படங்களை சட்ட விரோதமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் என்ற பெயரில் உள்ள இணையதளங்கள் வெளியிட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் அட்மினாக செயல்படுவபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் நன நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் ஏற்கனவே கூறியிருந்தார்.
 
அதேபோல், தமிழ்கன் இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம். எந்த அட்மினும் கைது செய்யப்படவில்லை. உங்களால் முடிந்தால் துப்பறிவாளன் படத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழ்கன் இணையம் சார்பாக ஓபன் சவால் விடப்பட்டது.
 
இந்நிலையில், துப்பறிவாளன் படம் இணையத்தில் வெளியாகியுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. ஆனால், எந்த இணையதளத்தில் என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.