புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (00:31 IST)

சொன்னதை செய்தார் விஷால்! விவசாயிகளுக்கு கிடைக்கும் ஒரு ரூபாய்

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சமீபத்தில் ஒரு ரூபாய் திட்டம் ஒன்றை அறிவித்தார். இதன்படி திரையரங்குகளில் வசூலாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாய் எடுத்து அதை விவசாயிகளுக்கு தருவதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்திற்கு முதலில் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் ஒப்புக்கொண்டனர்.



 
 
இந்த நிலையில் விஷால் நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படம் திரையிடப்படும் திரையரங்குகளில் வசூலாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாய் எடுத்து அதை விவசாயிகளுக்கு தர விஷால் முன்வந்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் அவரே என்பதால் இந்த திட்டத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே ஆன்லைன் பைரசியில் பாசிட்டிவ் நடவடிக்கை எடுத்து வரும் விஷால், ஒரு ரூபாய் திட்டத்தையும் தனது படத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளதால் சொன்னதை செய்து காட்டிவிட்டார் விஷால் என்று பாராட்டப்படுகிறது.