வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (16:40 IST)

நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ்: அனுப்பியது யார் தெரியுமா?

நடிகர் விஷால் தயாரித்து நடித்து முடித்துள்ள சக்ரா என்ற திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நடிகர் விஷால் நடிப்பில் ஆனந்தன் என்பவர் இயக்கிய சக்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. ஷராதா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது என்றும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது என்றும் ஓடிடி ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் நடிகர் விஷால் மற்றும் சக்ரா படத்தை வாங்கிய ஓடிடி தளங்களுக்கு சினிமா பைனான்சியர் விஜய் கோத்தாரி என்பவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவர் அந்த நோட்டீஸில் சக்ரா படத்தை வெளியிடும் முன்னர் விஷால் தன்னிடம் வாங்கிய ரூபாய் 58.33 லட்சத்தை தரவேண்டும் என்றும் அந்த பணத்தை தந்த பின்னரே அவர் சக்ரா படத்தை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
இந்த நோட்டீஸ் காரணமாக படம் திட்டமிட்டபடி வெளிவருமா என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து விஷால் தரப்பினர் சினிமா பைனான்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த பிரச்சனையை சுமூகமாக முடிக்கப்பட்டு சக்ரா திரைப்படம் திட்டமிட்டபடி விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்பட்டு வருகிறது