வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (13:16 IST)

‘துணிவு’ பட வில்லன் நடிகர் திடீர் மரணம்.. என்ன ஆச்சு?

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்த பிரபல வில்லன் நடிகர் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 
 
பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகர் ரித்துராஜ் சிங். இவர் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பதும் அவரது நடிப்பு இந்த படத்தில் சூப்பராக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கணைய பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் ரித்துராஜ் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
இது குறித்த செய்தி வெளியானதும் பாலிவுட் திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் அஜித், ரித்துராஜ் சிங் குடும்பத்தினர்களிடம் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran