வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (07:12 IST)

சினிமாவில் 65 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்ஹாசன்… கொண்டாடித் தீர்த்த தக் லைஃப் படக்குழு!

தமிழ் சினிமாவில் 1960 ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமல்ஹாசன். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கேற்ப அந்த படத்திலேயே தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தை குழந்தை கமல்.

அதன் பின்னர் தன்னுடைய பதின் வயதுகளில் குணச்சித்திர நடிகராக தொடங்கி 70 களின் மத்தியில் கதாநாயக நடிகரானார். அதிலிருந்து இப்போது வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும், பல படங்களில் திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சினிமாவில் அவர் கால்பதிக்காத துறைகளே இல்லை எனும் அளவுக்கு சாதனைப் படைத்துள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் 65 ஆண்டுகளைக் கடந்துள்ள அவருக்கு தக்லைஃப் படக்குழுவினர் வாழ்த்துகளைத் தெரிவித்து அவரின் இந்த மைல்கல் சாதனையைக் கொண்டாடியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றனர்.