வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 30 மே 2021 (07:59 IST)

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் 3 நாயகிகள்: ஹீரோ இவர் தான்!

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தை இயக்கி முடித்துள்ள வெங்கட்பிரபு அடுத்ததாக ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்
 
காமெடி மற்றும் ரொமான்ஸ் கதை அம்சம் கொண்ட இந்தப் படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டோ, ரியா சுமன் ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
மேலும் இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் தான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் என்றும் வெங்கட்பிரபு தரப்பினர் தெரிவித்துள்ளனர்