வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2017 (12:36 IST)

இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்

களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த  ஓவியா “போலீஸ் சாம்ராஜ்யம்” படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

 
அன்னபூரணி மூவீஸ் சார்பில் அருணாச்சலம் தயாரித்து இருக்கும் படம் போலீஸ் சாம்ராஜ்யம். பிருத்விராஜ், ஓவியா, ஜெமினி  கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா, பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியப் பின் ஓவியா நாயகியாக நடித்து வெளிவரும் படம் என்பதால் தமிழகத்தில்  250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் ரிலீசாகிறது. மேலும் தமிழ், மலையாளம், இந்தி என மும்மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் செப்டம்பர் 22ஆம் தேதி தமிழகத்தில் ரீலீஸ் செய்யப்படவுள்ளது.