வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : திங்கள், 20 மார்ச் 2017 (18:03 IST)

22ஆம் தேதிக்கு பின்னர் பன்னீர்செல்வம் பேசமாட்டார். டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சசிகலா அணியின் சார்பாக போட்டியிடும் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைதேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது., இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசார பணிகளை ஒருங்கிணைக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



இந்த குழுக்களில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் மற்றும் பா. வளர்மதி உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன். 100 சதவீதம் இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். இரட்டை இலை சின்னம் குறித்து  பன்னீர்செல்வம் 22-ம் தேதி வரைதான் பேசுவார். அதன்பின்னர் பேசமாட்டார். மேலும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதில் எனக்கு எந்த சட்ட சிக்கலும் இல்லை' என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.