திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (19:24 IST)

''அஜித்61'' படத்தின் ஷூட்டிங் இங்கு தான் நடக்கிறது...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.
 

சமீபத்தில் ஹைதராபாத்தில் மிக வேகமாக நடந்த ஷூட்டிங் முடிந்த  நிலையில், அஜித் பைக்ரேஸ் சம்பந்தமாக லண்டன் சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வரும்  நிலையில், படக்குழுவினர் அஜித் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

தற்போது ஷூட்டிங்கில் ஐதராபாத்தில் நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில்,  தெலுங்கானாவில் இன்று முதல் சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியுள்ளதால் படத்தை மேற்கொண்டு தொடங்குவதில் சிக்கல் உள்ளதாகவும், அதனால், இப்பட ஷூட்டிங் இப்போதைக்கு முடியாது என்பதால் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை எனவும்  அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்த பின் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் மஞ்சுவாரியார் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது சென்னையில் நடந்து வருவதாகவும்,அஜித்குமார் இந்தியா திரும்பிய பின் மீண்டும் புனேவில் ஷுட்டிங் நடப்பதாகவும் கூறப்படுகிறது.