திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (19:28 IST)

எனது முன்னேற்றத்திற்கு காரணம் இவர்தான் - குஷ்பு கண்ணீர்!!!

தனது முன்னேற்றத்திற்கு தனது தாய் தான் காரணம் என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

கடந்த 80 மற்றும் 90 களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான திகழ்ந்தவர் குஷ்பு.  இவர் அப்போதைய முன்னணி நடிகரள் அனைவருடனும் நடித்தவர் ஆவார். இவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டினார்கள்.

இந்நிலையில், நடிகை குஷ்பு சமீபத்தில் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தார்.

சட்டசபைத் தேர்தல் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில், தனது முன்னேற்றத்திற்கு வயதான தனது தாய்தான் காரணம் எனக் கூறினார்.

நடிகை குஷ்பு தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தகக்து.