1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2020 (18:08 IST)

’உலகில் தலைசிறந்த விளம்பரம் ’’..... இப்டியுமா எடுப்பாங்க...எல்லோரையும் அழுது, நெகிழச் செய்த வீடியோ !

மகேந்திரா நிறுவனத்தின் தலைபர் ஆனந்த் மகேந்திரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். உலக நிலவரங்களைக் கூர்ந்து கவனிக்குமவர் அவ்வப்போது தனது கருத்துகளையும் பதிவு செய்வார். சில சமயங்களில் சமுகக் கருத்துள்ள வீடியோக்களையும் பதிவு செய்வார். இது வைரலாகும்.

இந்நிலையில், இன்று தனது சமூக வலைதளப் பக்கமான டுவிட்டர் ஓரு வீடியோவைப் பதிவிட்டு, அதில் நான் இந்த வீடியோவைப் பார்த்து அழுதுவிட்டேன். எனக்குப் பேத்தியில்லை ஆனால் அச்சிறுமி வயதில் பேத்தி இருக்கிறார் என  என்று நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வீடியோவில், ஒரு முதியவர் சிறிய குண்டுமணியைத் தூக்க முடியாமல் தவிக்கிறார். இதற்காக நாள்தோறும் பயிற்சி எடுக்கிறார்.  ஒருநாள் தனது தொடர் பயிற்சியால் அதைத் தூக்குகிறார். இதையடுத்து, தன் மகள் வீட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவுக்கான செல்லுகிறார். அப்போது தன் பேத்திக்காக பரிசு ஒன்றை வங்கிச் செல்லுகிறார். அதைத் திறந்து பார்த்த சிறுமி உள்ளே கிறிஸ்துமஸ் ஸ்டார் இருந்ததைப் பார்த்து மகிழ்கிறார். உடனே தாத்தா பேத்தியைத் தூக்கி கிறிஸ்துமஸ் மரத்தில் அருகே வைத்து, நிற்கும்போது, கிறிஸ்துமஸ் மரத்தின் மீது பேத்தி அந்த ஸ்டாரை வைக்கும்போது, தாத்தா கண்கலங்குவார்.

அதாவது, முதியவர் நாள்தோறும் பெல்லைத் தூக்குவதற்காக பயிற்சி எடுத்ததே தனது பேத்தியைத் தூக்க வேண்டும் என்பதற்குத்தான் என்பது விளம்பரத்தின் கான்செப்ட். 3 நிமிட வீடியோ உலக வைரலாகிறது.