'சர்கார்' ரசிகர்களுக்கு அமெரிக்க திரையரங்குகள் கொடுக்கும் 'சர்ப்ரைஸ்'

Last Modified திங்கள், 5 நவம்பர் 2018 (19:08 IST)
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் திரைப்படம் ரிலீஸாக இன்னும் ஒருசில மணி நேரங்களே உள்ளது. இந்த படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்ட நிலையில் எதிர்பார்ப்பின் சதவிகிதம் அதிகரித்து கொண்டே போகிறது.ல்

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒருசில திரையரங்குகளில் 'சர்கார்' படத்தில் இடம்பெற்ற விஜய் ஓப்பனிங் பாடலை இருமுறை திரையிட முடிவு செய்துள்ளனர். இந்த சர்ப்ரைஸ் செய்தி அறிந்து அந்த குறிப்பிட்ட தியேட்டர்களில் சர்கார்' படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் அதிகளவில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்கா சினிமா வரலாற்றில், ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை இரண்டாவது முறையாக திரையிடுவது இதுதான் முதல் முறை. கடந்த இருபது, முப்பது வருடங்களுக்கு முன், ரஜினி-கமல் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஒருசில பாடல்கள் இருமுறை தமிழக திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :