1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2023 (20:11 IST)

''ரத்தம் பாக்கற நேரம் வந்துருச்சு''..விஜய் ஆண்டனிக்கு பதிலளித்த பிரபலம்

ratham
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி.
 
இவர் நடித்து தயாரித்து இயக்கிய பிச்சைக்காரன் 2  படம்  வெற்றி பெற்று வசூல் குவித்தது.
 
இதையடுத்து, ரோமியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பட முதல் ஷெட்யூல் மலேசியாவில் முடிந்து, விரைவில் அடுத்தகட்ட ஷூட்டிங் நடைபெறவுள்ளது.
 
இந்த நிலையில், விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார்,   நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ரத்தம். இப்படத்தின் அடுத்த அப்டேட் நாளை காலை 10:00 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து விஜய் ஆண்டனி தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’என்ன சி.எஸ். அமுதன் ரத்தம் வருதாமே உடம்ப பாத்துக்கங்க…’’.என்று பதிவிட்டிருந்தார்.
 
இதற்கு சி.எஸ்.அமுதன்,’’ ஆமா நண்பா! ரத்தம் பாக்கற நேரம் வந்திருச்சு. நாளைக்கு காலைல 10 மணிக்கு’’ என்று பதிட்டுள்ளார். இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.